உள்ளடக்கத்துக்குச் செல்

40 பழ மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
40 பழ மரத்திலிருந்து கிடைத்த ப்ளம்ஸ் பழங்கள்

40 பழங்கள் கொண்ட மரம் (Tree of 40 Fruit) என்பது சிரக்கியூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாம் வான் அகென் என்பவர் ஒட்டுதல் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பழ மரங்களில் ஒன்றாகும்.[1] ஒவ்வொரு மரமும் அமெரிக்காவில் சூலை முதல் அக்டோபர் மாதம் வரை வரிசையாக பழுக்கக்கூடிய 'புரூனசு' பேரினத்தைச் சார்ந்த 40 வகையான 'உள்ளோட்டுச் சதைக்கனியினைத்' தருகிறது.[2][3]

வளர்ச்சி

[தொகு]

சாம் வான் ஏகன் நியூயார்க் நகரில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலை இணை பேராசிரியர் ஆவார்.[4] பென்சில்வேனியா டச்சு குடும்பத்தைச் சார்ந்த அவரது குடும்பத்திற்கு ஒரு பண்ணை இருந்தது. மேலும் ஒரு சமகால கலைஞரான அவர் பாரம்பரிய கலை உருவாக்கத்திற்கு அப்பால் பணியாற்றுகிறார். தகவல் தொடர்பு, தாவரவியல் மற்றும் வேளாண்மையில் புதிய முன்னோக்கு கலை திட்டங்களை உருவாக்குகிறார்.[5][6]

கலைஞரின் "மரம் 71"பற்றிய திட்ட வரைபடம்

வான் ஏகன் 2008 ஆம் ஆண்டில், கலை சார்த்த ஒரு செயல் திட்டத்திற்காக ஒரு பன்முக பூக்களைத் தரும் மரம் ஒன்றை உருவாக்க மாதிரிகள் தேடும் போது, நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்படவிருந்த நியூ யார்க் ஸ்டேட் வேளாண்மை பரிசோதனை நிலையத்தின் 3 ஏக்கர் (1.2 ஹெக்டேர்) பழத்தோட்டத்தை வாங்கினார்.[2][3]

அவர் அங்கு வளர்ந்து வரும் 250 பாரம்பரிய மரபுகள் உள்ள சிலவற்றிலிருந்து மொட்டுக்களை ஒரு வகை மரத்தின் மீது ஒட்டத் துவங்கினார்.[3] சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு,அந்த மரம் நாற்பது வெவ்வேறு கிளைகளை "தாய்" மரங்களிலிருந்து வளரச்செய்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் வித்தியாசமான பழங்களுடன் -வாதுமை, சீமை வாதுமைப்பழம், செர்ரி, நெக்டரின், குழிப்பேரி மற்றும் பிளம் வகைகள் உட்பட- பல்வேறு பழங்களைக் கொண்ட ஒரு மரம் வளர்ந்தது.

பழப்பண்ணையில் 40 பழ மரத்திலிருந்து கிடைக்கும் பழங்கள்

ஒவ்வொரு வசந்தகாலத்திலும் அந்த மரம் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையாக பூத்துக்குலுங்கும் .[3]

பரவல்

[தொகு]
சாம் வான் ஏகன் சிற்பக்கலை இணை பேராசிரியராகப் பணிபுரியும் சிரக்கியூஸ் பல்கலைக்கழக வளாகத்தில் "மரம் 75",- 40 பழமரம்

2014ஆம் ஆண்டளவில், வான் ஏகன் '40 பழமரத்தின் 16 மரங்களை உற்பத்தி செய்து, சமூக தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகள் உட்பட பல்வேறு தனியார் மற்றும் பொது இடங்களில் நிறுவினார்.[3] இவற்றுள் நியூட்டன், மாசசூசெட்ஸ்; பவுண்ட் ரிட்ஜ், ஷாட்ஹில்ஸ்; நியூ செர்சி; பென்டொன்வில்லே, ஆர்கன்சா மற்றும் சான் ஜோஸ், கலிபோர்னியா ஆகியவை முக்கியமான இடங்களாகும்.[3][7] மரங்கள் நிறைந்த ஒரு பழத்தோட்ட நகரத்தை விரிவுப்படுத்தவும் திட்டமிடுகிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Buckley, Madeleine (24 April 2016). "Explore the SU campus through these 6 historic statues". The Daily Orange. http://dailyorange.com/2016/04/explore-the-su-campus-through-these-6-historic-statues/. 
  2. 2.0 2.1 "The Gift Of Graft: New York Artist's Tree To Grow 40 Kinds Of Fruit". NPR. 3 August 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "This tree produces 40 different types of fruit". ScienceAlert. Archived from the original on 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  4. Elliot, Danielle (19 November 2014). "Could a Tree of 40 Fruit Hold a Clue to Solving World Hunger?". Not Impossible. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  5. "SAM VAN AKEN". College of Visual and Performing Arts, Syracuse University. Archived from the original on 15 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 20 years of Artists-In-Residence McColl Center
  7. Salkeld, Lauren. "The Tree of 40 Fruit Is Exactly as Awesome as It Sounds". Epicurious. http://www.epicurious.com/archive/chefsexperts/interviews/sam-van-aken-interview. பார்த்த நாள்: 25 April 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=40_பழ_மரம்&oldid=3918546" இலிருந்து மீள்விக்கப்பட்டது